தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

75 வயதான தம்பதியினருக்கு கரோனா பாதிப்பு!

கோவை: பொள்ளாச்சியை அடுத்த சுப்பே கவுண்டன்புதூரில் வயதான தம்பதியினருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வயதான தம்பதியினருக்கு கரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி
வயதான தம்பதியினருக்கு கரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி

By

Published : Jun 20, 2020, 12:28 PM IST

பொள்ளாச்சியை அடுத்த சுப்பே கவுண்டன்புதூரில் 75 மற்றும் 72 வயதுள்ள வயதான தம்பதியினர் உடல்நலம் பாதிப்பு காரணமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றனர்.

அங்கு அவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதித்த போது கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் கோவையில் உள்ள இஎஸ்ஐ (ESI) மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். சார் ஆட்சியர் வைத்தியநாதன், சுப்பே கவுண்டன்புதூரில் தம்பதியினர் வசித்த வீட்டிற்கு நேரில் சென்று விசாரனை மேற்கொண்டார்.

அப்போது தம்பதியினரின் மகன் லாரி ஓட்டுனர் என்பதும் கேரளாவிற்கு சென்று வந்தவர் மூலம் பெற்றோர்க்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என தெரிய வந்தது.

இதையடுத்து சுப்பே கவுண்டன் புதூர் முழுவதும் பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டு கிருமி நாசினி அடிக்க உத்தரவிட்டார். மேலும் அருகில் வசிக்கும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மருத்துவ குழு நியமிக்கப்பட்டு பரிசோதனை நடை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: தஞ்சைக்கு வந்த வெட்டுக்கிளி கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details