தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

உதவி ஆய்வாளருக்கு கரோனா உறுதி: பொதுமக்கள் காவல் நிலையம் வர தடை..! - Corona Confirm Aanaimalai sub inspector

கோவை: ஆனைமலை காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து பொதுமக்கள் காவல் நிலையம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Public barred from coming to Anaimalai police station
Public barred from coming to Anaimalai police station

By

Published : Sep 3, 2020, 10:06 PM IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் காவல் சோதனைச் சாவடி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இதன் காரணமாக, சோதனைச் சாவடி தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆனைமலை காவல் நிலையம் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் உள்ளே வந்துச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, புகார் கொடுக்க வரும் பொதுமக்களை காவல் நிலைய வளாகத்தில் வைத்தே காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details