தமிழ்நாட்டில் நேற்று ஐந்தாயிரத்து 981 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டத்தில் 130 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில், வீரபாண்டி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர், கம்பம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கே.கே. பட்டியைச் சேர்ந்த 38 வயதுடைய செவிலி என 69 பெண்கள், 55 ஆண்கள் உள்பட ஆறு குழந்தைகளுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 179ஆக அதிகரித்துள்ளது.
இவற்றில் 10 ஆயிரத்து 170 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள ஆயிரத்து 870 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மேலும் தேனி மாவட்டம் அல்லிநகரம் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த 65 வயது முதியவர், பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் என நேற்று இரண்டு பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளது.