தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

திருவள்ளூரில் ஒரே நாளில் 300 பேருக்கு கரோனா உறுதி! - கரோனா உறுதி

திருவள்ளூர்: கரோனா பரிசோதனை முடிவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona Confirm 300 people in Tiruvallur
Corona Confirm 300 people in Tiruvallur

By

Published : Jul 9, 2020, 3:47 AM IST

உலகத்தையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்று, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஜூலை8) ஒரேநாளில் 300 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் துப்புரவாளர்கள், காவல்துறையினர் தீவிர தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் ஐந்தாயிரத்து 507 பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாயிரத்து 457 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 1939 பேர் இதுவரை சிகிச்சை பெற்று வருகின்றனர். 111 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கழுவவேண்டும், தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துவருகிறது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க:ஒரே நாளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் - சென்னை மாநகராட்சி!

ABOUT THE AUTHOR

...view details