புதுச்சேரியில் நேற்று (ஜூன் 15) சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”புதுச்சேரியில் 194 பேர் வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் புதிதாக 8 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 202ஆக அதிகரித்துள்ளது. 108 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.
புதுச்சேரியில் கரோனா பாதிப்பு 202ஆக அதிகரிப்பு - சுகாதாரத் துறை இயக்குனர் - Mohankumar, Director of Health department
புதுச்சேரியில் மேலும் 8 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு 202ஆக அதிகரித்திருப்பதாக அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றூ மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேரும் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் என ஆகமொத்தம் 4 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றனர்.
புதுச்சேரி சேர்ந்த ஒருவர் சென்னை மற்றும் சேலம் பகுதியிலும், மாகே பகுதியை சேர்ந்த ஒருவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிகிச்சை பிரிவில் உள்ளனர். புதுச்சேரியில் கரோனா பாதிப்பில் 103 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்” என்றார்.