வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்று வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர், விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் மூன்று காவலர்கள், ஊர்க் காவல் படையைச் சேர்ந்த ஒருவர் என காவல் துறையினர் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காவல் ஆய்வாளர் உள்பட 77 பேருக்கு கரோனா தொற்று உறுதி - வேலூர் கரோனா எண்ணிக்கை
வேலூர்: காவல் ஆய்வாளர் உள்பட 77 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500க்கும் மேல் கடந்துள்ளது.
இவர்கள் மட்டுமின்றி சிஎம்சி மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் என மொத்தம் 77 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் துறையினர் பணியாற்றிய காவல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, காவல் நிலைய பணிகள் அனைத்தும் வெளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுவரும் பட்டியலின் படி இதுவரை வேலூர் மாவட்டத்தில் 564 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 103 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.