விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இருவர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சுகாதாரப் பணி செய்ய சென்னை சென்றுள்ளனர்.
அங்கு 20 நாள்கள் பணி செய்துவிட்டு வீடு திரும்பினர். இந்நிலையில் அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடந்தது. இதில் அவர்கள் இருவருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.