ராமநாதபுரத்தில் கரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் 132 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று புதிதாக 53 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு ராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி என மூன்று இடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவால் முன்னாள் அரசு மருத்துவர் பலி - ராமநாதபுரம் கரோனாவால் அரசு மருத்துவர் பலி
ராமநாதபுரம்: கரோனாவால் முன்னாள் அரசு மருத்துவர் உயிரிழந்தார்.
இதன்மூலம் ராமநாதபுரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தமாக 49 பேர் உயிரிழந்திருந்த நிலையில் இன்று ராமநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த 75 வயது மருத்துவர் பால குருநாதன் சிகிச்சை பலனின்றி மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இவர் ராமநாதபுரம் தலைமை மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 தாண்டியது நோய் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க:அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு!