தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

குன்னூர் அரசு மருத்துவர்கள் இடம் மாற்றம்: தர்ணாவில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட மருத்துவர்கள்! - மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

நீலகிரி: குன்னூர் அரசு மருத்துவர்கள் கூண்டோடு கூடலூருக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்து பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Coonoor government doctors relocated: Doctors involved in Tarna!
மருத்துவர்கள் தர்ணா

By

Published : Jul 16, 2020, 7:35 PM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர் அரசு மருத்துவமனையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு பணியாற்றும் மருத்துவர் ஒருவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதே நேரத்தில் இங்கு பணியாற்றும் எட்டு மருத்துவர்களை 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூடலூர் பகுதிக்கு திடீரென இடமாற்றம் செய்து அலுவலர்கள், நள்ளிரவு நேரத்தில் உத்தரவிட்டார்கள்.

இதனைக் கண்டித்து, மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காணும் வரை, போராட்டம் தொடரும் எனவும் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details