தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நிலுவைத் தொகையை பெற்றுத்தரக்கோரி ஒப்பந்ததாரர் உண்ணாவிரதம்: போலீஸ் விசாரணை! - ஒப்பந்ததாரர் உண்ணாவிரதம்

ஈரோடு: பவானி அருகே தனியார் நிறுவனத்தில் பாக்கியுள்ள 68 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை பெற்றுத்தரக்கோரி ஒப்பந்ததாரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஈரோடு ரயில் நிலையத்தில் ஒப்பந்ததாரர் உண்ணாவிரத போராட்டம்
ஈரோடு ரயில் நிலையத்தில் ஒப்பந்ததாரர் உண்ணாவிரத போராட்டம்

By

Published : Apr 23, 2021, 8:18 PM IST

ஈரோடு மாவட்டம் பவானி பகுதி லட்சுமி நகரைச் சேர்ந்தவர் துரைக்கண்ணன். இவர் திருச்சியிலுள்ள ஸ்ரீ பெஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட் என்ற நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்புப் பணிகள் செய்யும் ஒப்பந்ததாரராக கடந்த மூன்று வருடங்களுக்கு முன் பொறுப்பேற்று நடத்தி வந்துள்ளார்.

ஒப்பந்தம் நிறைவடைந்து எட்டு மாதங்கள் ஆகியுள்ள ஒன்னேகால் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் மீதம் 68 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது.

அந்த நிலுவைத் தொகையைப் பெறுவதற்கு அவர் பலமுறை பல்வேறு கட்ட முயற்சிகளில் ஈடுபட்டும் பதில் இல்லை. இதனையடுத்து இன்று (ஏப்.23) அவர் போர்வை, தலையணையுடன் ஈரோடு ரயில்வே சந்திப்பின் நடைமேடையில் அமர்ந்து திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல் துறையினர், துரைக்கண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details