தமிழ்நாட்டில் சென்னை மற்றம் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கரோனா வைரஸூன் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வரும் 30ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் நோய்தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்னை முழுவதும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தப் பரவலை கட்டுப்படுத்த, தொற்று அதிகம் உள்ள பகுதியை தனிமைப்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்துவருகிறது. மாநகராட்சியில் தொற்றின் பரவல் தீவிரம் அடைந்துவருவதால், 61 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது 90 ஆக உயர்ந்துள்ளது.