நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளர் ஜெபி மெத்தார் பரப்புரை மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து கேரளா செல்ல தூத்துக்குடி விமானநிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துவருகின்றனர். நிச்சயமாக இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும். கூட்டணிக் கட்சியினரும் ஒற்றுமையாக செயல்பட்டு காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு வித்திட்டுவருகின்றனர். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ஓட்டுகளைப் பெறமுடியாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி நல்ல முடிவுகளைப் பெற்றுள்ளது.