தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பெட்ரோல் விலையேற்றத்துக்கு எதிராக, காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு - பெட்ரோல் விலையேற்றம்

டெல்லி: பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.

கே.சி. வேணுகோபால்
கே.சி. வேணுகோபால்

By

Published : Jun 24, 2020, 9:20 AM IST

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையேற்றம் தொடர்பாக நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த, கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார்.

மேலும், “மத்திய அரசு 17ஆவது முறையாக தொடர்ந்து எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. இது நாட்டு மக்களுக்கு கடினமான சூழலை உருவாக்கியுள்ளது.

நாடு முழுவதும் மக்கள் கரோனா நெருக்கடியை சந்தித்து வரும் இச்சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா விலை குறைந்த போதிலும், அதன் மீதான வரியை பல மடங்கு உயர்த்தி நாட்டு குடிமக்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது.

இந்திய மக்கள் மீது, ஆளும் அரசு பெரும் சுமைகளை ஏற்றி லாபம் ஈட்டுகிறது. 2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் டீசல் மீதான கலால் மற்றும் இதர வரிகளை 820 விழுக்காடும், பெட்ரோலுக்கு 258 விழுக்காடும் உயர்த்தியுள்ளது பாஜக அரசு” என்றார்.

இதற்கிடையில் செயற்குழுவில், “2014ஆம் ஆண்டில் 9.20 ரூபாயாக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி தற்போது ரூ. 20.78 ஆகவும், ரூ. 3.46 ஆக இருந்த டீசல் மீதான வரி ரூ.28.37ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை கடந்த ஆறு ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்ததன் விளைவாக, குடிமக்களுக்கு எந்த நன்மைகளும் வழங்காமல், 18 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு வருவாய் ஈட்டியுள்ளதாகவும்” குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: 'நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கை மோசம்'- ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details