இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் செய்து வரும் அத்துமீறல்களையும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசையும் கண்டித்து வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (18-06-2020) கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை அணித்தலைவர் அஸ்லம் பாஷா தலைமை தாங்கினார். இபோராட்டத்தில் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட நூருல்லாபேட்டை பகுதியில் இருந்து டெல்லி நோக்கி நடைபயணத்தை மேற்கொண்ட 15க்கும் குறைவான காங்கிரஸ் கட்சியினரை வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல் துறையிருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.