ஜூன் 16ஆம் தேதி இரவு இந்திய - சீன எல்லையான லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய, சீன ராணுவத்திற்கு இடையே நடைபெற்ற கடும் மோதலில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
பெரம்பலூரில் ராணுவ வீரர்களுக்கு வீரவணக்க அஞ்சலி - Ladakh border
பெரம்பலூர்: இந்திய - சீன எல்லையில் ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் நாட்டிற்காக உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு, இந்து முன்னணி சார்பில் வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
Condolence function
இந்நிலையில், இந்திய திருநாட்டிற்காக உயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு பெரம்பலூர் இந்து முன்னணி சார்பில், மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. சீன நாட்டை கண்டித்தும், சீனப் பொருள்களை தவிர்க்க வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் பழனி உடல் நல்லடக்கம்