மதுரையின் பல்வேறுப் பகுதிகளில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னையைப் போன்றே மதுரையிலும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்தியும் மிகத் தீவிரமாக பரவிவருகிறது. நாளை மறுநாள் (ஜூன் 24) முதல் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.
இந்தத் தகவலால், மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு விற்பனை செய்யும் கேன்டீனில், பொருள்கள் வாங்க, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தினர்கள் காலை முதலே வாசலில் காத்திருந்தனர்.