இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும் சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 200 மழலையர் வகுப்புகள் இயங்கிவருகின்றன.
இந்த கல்வி ஆண்டில் சென்னை பள்ளிகள் அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் எல்.கே.ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்று இடை நிற்றல் மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் விவரங்களை சேகரிக்கவும் மாணவ மாணவியர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் தலைமை ஆசிரியரின் தலைமையில் ஆசிரியர்களை உறுப்பினராக கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் உள்ள ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இடைநிற்றல் மற்றும் பள்ளிக்கு செல்ல குழந்தைகளின் விவரங்களை சேகரித்து உரிய படிவத்தில் பூர்த்தி செய்து நாள்தோறும் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.