தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு - Electricity attack

விருதுநகர்: சாத்தூர் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Student death
Student death

By

Published : Jun 24, 2020, 7:26 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது மகன் ராதாகிருஷ்ணன்(20). இவர் சாத்தூரிலுள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மாதிரி உறுப்புக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார்.

இன்று இவர் தனது வீட்டில் உள்ள மோட்டார் சுவிட்ச் போடச் சென்றுள்ளார். அப்போது மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டுள்ளார். பின்னர் உறவினர்கள் அவரை சாத்தூர் அரசு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இவரது உடல் சாத்தூர் அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்விற்காகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அம்மாபட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details