திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா-ஈஸ்வரி தம்பதியின் மகன் லோகநாதன்(20). லோகநாதன் திண்டுக்கல் தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பு பயின்றுவந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு அம்பாத்துரை-கொடைரோடு இடையே உள்ள ரயில் தண்டவாளத்தைக் கடக்க லோகநாதன் முயன்றுள்ளார்.
அப்போது, நாகர்கோவிலிலிருந்து திருச்சி மார்க்கமாகச் சென்ற ரயில் லோகநாதன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவ்வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.