தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பழங்குடியின கிராமங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி வரும் ஆட்சியர்! - பழங்குடியின கிராமங்கள்

நீலகிரி : குன்னூர் பழங்குடியின கிராமங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி வருவது பாராட்டுகளை பெற்றுவருகிறது.

பழங்குடியின கிராமங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி வரும் ஆட்சியர்!
பழங்குடியின கிராமங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி வரும் ஆட்சியர்!

By

Published : Jul 12, 2020, 12:03 AM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே உள்ள வனப்பகுதிகளில் தொன்மை வாய்ந்த பழங்குடியின மக்கள் தலைமுறைகளை கடந்து வாழ்ந்து வருகின்றனர்.

அங்குள்ள கோழிக்கரை, குரும்பாடி, புதுக்காடு போன்ற பழங்குடி கிராமங்களில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகளை வழங்க உத்தரவிட்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அதனை நாள்தோறும் கண்காணித்து வருகின்றார்.

குன்னூர் பகுதியில் உள்ள சத்துணவு ஊழியர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் ஒரு வேலை உணவு மற்றும் கஞ்சி, சத்து மாவு உள்ளிட்டவற்றை தயார் செய்து சத்துணவு ஊழியர்கள் பழங்குடியின மக்களுக்கு வழங்கி வருகின்றனர். மேலும், மாதத்திற்கு ஒரு முறை அவர்களின்‌ உடல் நிலை பரிசோதனை செய்யப்படுகிறது.

பழங்குடியின மக்களின் நலனை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா எடுத்துவரும் நடவடிக்கைகள் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details