ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அங்கு பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இந்த தண்ணீர் அளவை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொசஸ்தலை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - Kosasthalaiyar river
திருவள்ளூர்: கொசஸ்தலை ஆறு, திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டங்களைச் சேர்ந்த கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Kosasthalaiyar river
இந்த தண்ணீர் நள்ளிரவில் பள்ளிபட்டு பாலத்தை கடக்கும் என்றும், இன்று காலை நல்லாட்டூர் அணை வரை வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், கொசஸ்தலை ஆறு கரையோரபொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வருவாய்த்துறை, காவல், பொதுப்பணித்துறை ஆகிய துறைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.