தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த புதுக்கோட்டை ஆட்சியர்!

புதுக்கோட்டை: கரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களை ஊக்கும்விக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி‌ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Collector Umamakeswari congratulated the doctors
Collector Umamakeswari congratulated the doctors

By

Published : Jul 1, 2020, 8:53 PM IST

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி இன்று (ஜூலை 1) இராணியார் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில் மருத்துவர் தினத்தை முன்னிட்டு பழக்கூடைகளை நேரில் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் கூறுகையில், "விலைமதிப்பில்லாத மனித உயிர்களை காக்கும் வகையில் தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரியும் மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவ தினத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்த வகையில், இரவும் பகலும் அயராது பாடுபட்டு கரோனா தொற்றிற்கு எதிராக போராடி மிகச்சிறந்த முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இன்றைய தினம் புதுக்கோட்டை இராணியார் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில் மருத்துவர் தினத்தை முன்னிட்டு பழக்கூடைகளை நேரில் சென்று வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

இந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கரோனா தொற்று நோயாளிகள் தற்போது நல்ல நிலையில் உள்ளனர். இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைகள், உணவு உள்ளிட்டவை சிறந்த முறையில் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னை- 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், மருத்துவ உதவியாளர்கள் வேலை நிறுத்தம்

ABOUT THE AUTHOR

...view details