தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு காலை 6.30 மணிக்கு டீ, காலை 8 மணிக்கு மூன்று இட்லி, சாம்பார், கபசுரக் குடிநீர், காலை 10 மணிக்கு ரொட்டி, பால், இரண்டு வாழைப்பழங்கள், காலை 11 மணிக்கு கபசுரக் குடிநீர் அல்லது நெல்லிக்காய் ஜூஸ், கிரீன் டீ, மதியம் 1 மணிக்கு மதிய சாப்பாடு, இரண்டு முட்டைகள், பொரியல், கீரை சாம்பார், மோர், மாலை 3 மணிக்கு கபசுரக் குடிநீர், மாலை 4. மணிக்கு டீ சுண்டல், ராகி கொழுக்கட்டை, பச்சைப்பயிறு, இரவு 7 மணிக்கு கிச்சடி, சப்பாத்தி ஆகியவை வழங்கப்பட்டுவருகின்றன.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுவரும் உணவுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சமையலறையில் உணவு தயாரிக்கும் முறைகள், கரோனா நோயாளிகளுக்கு உணவுகள் வழங்கப்படும் வேளைகள், முறைகள் ஆகியவை குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.