வேலூர் மாவட்டம், காட்பாடி, விரிஞ்சிபுரம், பிரம்மபுரம், கண்டிப்பேடு, லத்தேரி, கஞ்சலூர், வண்டறந்தாங்கல் ஆகியப் பகுதிகளில் வேளாண்மைதுறையின் சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மானியத்துடன் கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பண்னை குட்டை, ஏரி சீரமைப்பு, நவதானிய பயிர்கள் பயிரிடுதல், தோட்டக்கலை, மலைபயிர்கள், மாங்கன்றுகள் பயிரிடுதல், பசுமை தோட்டங்கள், சூரிய ஒளி மின் ஆற்றல் பம்பு செட்டுகளின் செயல்பாடுகள் மற்றும் பப்பாளி தோட்டம் உள்ளிட்டவற்றை சண்முகசுந்தரம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.