இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் விவரங்களை சேகரிக்க அரசு தேர்வுத்துறை உத்தரவு! - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
சென்னை: 10ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை எழுதாத மாணவர்களின் விவரங்களை சேகரிக்க அரசு தேர்வுத்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
அதில், "கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, பொதுத்தேர்வு முடிவுகளை ஆசிரியர்கள் தயார் செய்வதற்கு மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள், இயற்கை எய்திய மாணவர்களின் விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். அதேபோல் 11ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்". இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.