கோயம்புத்தூர் மாவட்டத்தை அடுத்த சிறுவாணி பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தந்தை இறந்து 30 ஆண்டுகள் ஆன நிலையில் இவரும் இவரது தாயாரும் கிடைத்த வேலைகளை செய்து வாழ்க்கையை நடத்திவருகின்றனர்.
பெண்ணின் மருத்துவ செலவிற்கு ரூ.25,000 வழங்கிய மாவட்ட ஆட்சியர்! - பெண்ணின் மருத்துவ செலவிற்கு உதவிய மாவட்ட ஆட்சியர்
கோயம்புத்தூர்: இளநீர் வியாபாரம் செய்யும் பெண்ணின் மருத்துவ செலவிற்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
இந்நிலையில் இவருக்கு சிறுநீரக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு போதிய பணம் இல்லாததால் மிகவும் சிரமத்தில் உள்ளதாகவும், தங்களால் முடிந்தவரை பணம் அளித்து உதவுமாறும் ஜோதி. மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்குச் சென்றுள்ளார்.
அந்த கோரிக்கை கடிதத்தை பார்த்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அவரது சொந்த வங்கி கணக்கிலிருந்து 25ஆயிரம் ரூபாய் காசோலையை அந்த பெண்ணிற்கு அளித்து உதவினார்.