இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ரோந்து கப்பல் அமேயா காரைக்கால் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது கரைக்கு 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் இயந்திரக் கோளாறு காரணமாக, நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் குறித்து தகவல் கிடைத்தது.
நடுக்கடலில் சிக்கித் தவித்த எட்டு இந்திய மீனவர்கள் மீட்பு! - கடலோர காவல் படையினர்
காரைக்கால் அருகே நடுக்கடலில் சிக்கித் தத்தளித்த எட்டு இந்திய மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.
நடுக்கடலில் இருந்த கப்பல் மோசமான வானிலை காரணமாகக் கரையை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து, இந்தியக் கடலோரக் காவல்படை அப்படகை மீட்டு நாகப்பட்டின மீனவ அலுவலர்களிடம் ஒப்படைத்தது.
மீட்பு பணியின்போது இந்தியக் கடலோரக் காவல் படை, தொடர்ந்து படகின் உரிமையாளர், மீன்வளத் துறை அலுவலர்களுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மூலம் கடலில் தனி படகுடன் மீன் பிடிக்க செல்வதிலுள்ள ஆபத்துகள் தெரியவந்துள்ளதாகக் கூறிய இந்தியக் கடலோரக் காவல் படையினர், இனிவரும் காலங்களில் மீனவர்கள் கூட்டமாகவே மீன்பிடிக்கச் செல்ல வேண்டும், அதுவே பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.