தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமையவிருக்கும் ஒசூர் பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இம்மலர் மையமானது ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இஸ்ரேல், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகளுக்கு மலர்களை ஏற்றுமதி செய்யும் வகையில் உருவாக்கப்படவிருக்கிறது.
ரூ.20 கோடி மதிப்பீட்டில் பன்னாட்டு மலர் ஏல மையம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் - முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒசூரில் அமையவிருக்கும் பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
20 கோடி மதிப்பீட்டில் பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்
3 ஆயிரத்து 702 ஹெக்டேர் பரப்பளவில் மலர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓசூர், மோரனப்பள்ளி ஆகிய பகுதிகளில் 39 ஆயிரத்து 383 டன் மலர் உற்பத்தி செய்யபடும். இதன் மூலம் அரசுக்கு 150 கோடியில் இருந்து 200 கோடி ரூபாய் வரை அந்நிய செலாவணி கிடைக்கும். 20 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் 7.68 ஏக்கர் பரப்பளவில் இந்த மலர் ஏல மையம் அமைகிறது.