தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

செங்கல்பட்டு 6 வழிச் சாலை திட்டம்: முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைப்பு! - செங்கல்பட்டு 6 வழிச் சாலை

காஞ்சிபுரம்: சதுரங்கப்பட்டினம் முதல் செங்கல்பட்டு வரையிலான போக்குவரத்து சாலையை 6 வழிச் சாலையாக விரிவுபடுத்தும் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

CM Edapadi Palanisamy Opening Chengalpattu 6 way road project
CM Edapadi Palanisamy Opening Chengalpattu 6 way road project

By

Published : Jul 14, 2020, 10:52 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினத்திலிருந்து செங்கல்பட்டு வரைச் செல்லும் போக்குவரத்து சாலையை 6 வழி சாலையாக மாற்ற திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஜூலை 14) நடைபெற்றது.

இவ்விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். போக்குவரத்து சாலை விரிவுப்படுத்தும் திட்டம், ஏற்கனவே சாலையை விரிவுப்படுத்தி மக்கள் போக்குவரத்திற்காக வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை மீண்டும் அகலப்படுத்தும் திட்டமான ஆறு வழி சாலை அமைப்பதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் உரிய நேரத்தில் விரைந்து சென்று பயனடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இவ்விழாவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுமுகம், முன்னாள் மக்களவை உறுப்பினர் மரகதம் குமரவேல், அரசு அலுவலர்கள், அதிமுக கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:வேலூரில் இன்று 49 பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details