தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் மறைவுக்கு அதிமுக இரங்கல் - முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் மறைவிற்கு அதிமுக இரங்கல்

சென்னை: சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ். ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் மறைவிற்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

cm-condolences-for-former-mp-sr-subramanian
cm-condolences-for-former-mp-sr-subramanian

By

Published : Jun 26, 2020, 1:53 PM IST

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

"தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம்அடைந்தோம்.

சுப்பிரமணிய ஆதித்தன், 1984ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது, திருச்செந்தூர் தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சிறந்த முறையில் மக்கள் பணியாற்றியுள்ளார்.

மேலும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்காராகவும், நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் தலைவராகவும், திருச்செந்தூர் நிலவள வங்கியின் தலைவராகவும், நகர கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

அன்புச் சகோதரர் சுப்பிரமணிய ஆதித்தனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு, இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details