தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று 2016– 2019ஆம் ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 27 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 14 பேருக்கு துணை ஆட்சியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
27 துணை ஆட்சியர்கள் பணி நியமனம்: முதலமைச்சர் பழனிசாமி! - Appointment Of 27 Deputy Collector
சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 27 துணை ஆட்சியர்கள் பணி நியமனம் வழங்கிடும் அடையாளமாக 14 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
CM Appointed 27 Deputy Collector
இந்நிகழ்வின்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர், முதன்மைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கரோனா!