தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வலங்கைமான் தாலுகாவில் டாஸ்மாக் மூடல்

திருவாரூர்: டாஸ்மாக் பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் பரவியதால், வலங்கைமான் தாலுகாவில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கரோனா தொற்று அதிகம் பரவுவதால் டாஸ்மாக் கடைகள் மூடல்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு கரோனா தொற்று அதிகம் பரவுவதால் டாஸ்மாக் கடைகள் மூடல்

By

Published : Jun 26, 2020, 1:48 PM IST

திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்களை பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை மாவட்டத்தில் 294 பேருக்கு தொற்று பாதித்த நிலையில் மேலும் 28 பேருக்கு தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. வேளுக்குடி பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள், மகன் உள்ளிட்ட ஐந்து நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவருடைய தந்தை சென்னையில் உறவினர் வீட்டிற்கு சென்று வீடு திரும்பிய நிலையில் தந்தை மூலமாக கரோனா பரவியதாக தெரியவந்துள்ளது.

மேலும் பின்னவாசல் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு வயது மகள் அவருடைய தந்தை உள்ளிட்ட மூன்று பேருக்கும், உச்சிவாடி பகுதியை சேர்ந்த 50 வயது பெண்ணிற்கும், வலங்கைமான் டாஸ்மாக் கடையில் பணியாற்றும் சூப்பர்வைசர் மற்றும் சேல்ஸ் மேனுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மாவட்டம் முழுவதும் 322 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வலங்கைமான் பகுதியில் டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டதால் டாஸ்மாக் மாவட்ட மேலாளர், வலங்கைமான் தாலுகா முழுவதும் இன்று முதல் தேதி குறிப்பிடாமல் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.

மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காவலர்களின் பாதுகாப்பு முக்கியம்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

ABOUT THE AUTHOR

...view details