தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

குடிமராமத்துப் பணியைப் பயன்படுத்தி மண் கொள்ளை - விவசாயிகள் குற்றச்சாட்டு - ஏரியில் மணல் கொள்ளை

திருவண்ணாமலை: குடிமராமத்துப் பணி தொடங்கிய சில தினங்களிலேயே, குத்தகைதாரர்கள் ஏரி மண்ணைக் கொள்ளையடித்து விற்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏரி குடிமராத்து பணி தொடங்கிய சில தினங்களிலேயே, ஏரி மணலை கொள்ளையடித்து விற்கும் அவலம்
ஏரி குடிமராத்து பணி தொடங்கிய சில தினங்களிலேயே, ஏரி மணலை கொள்ளையடித்து விற்கும் அவலம்

By

Published : Jul 20, 2020, 1:03 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், தோக்கவாடி ஏரி குடிமராத்துப் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள குத்தகைதாரர்கள் சங்கர் மகாதேவன், குமார் ஆகியோர் எந்த ஒரு அரசு ஆணையும் இல்லாமல் அலுவலர்களுக்குத் தெரியாமல் ஏரியிலிருந்து அள்ளப்படும் மண்ணை அருகில் இருக்கும் மசூதியில் விற்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் விவசாயிகள் புகாரளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

விவசாயி அல்லாத ஒருவருக்கு தூர்வாரும் பணியைக் கொடுத்தால், பணி சரிவர செய்யமாட்டார்கள் என்று தமிழ்நாடு அரசு விவசாயிகள் மூலமாக குடிமராமத்துப் பணிகளைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. சிலர் அதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு தங்கள் சுயலாபத்திற்காக மண்ணை விற்றுவருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details