தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் பின்பு உள்ள மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்தெடுக்கும் நுண் உரம் செயலாக்க மையத்தில் கடந்த 18ஆம் தேதி ரேவதி என்ற பெண் ஊழியர் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் சிக்கி கை துண்டானது.
இயந்திரத்தில் சிக்கி கை துண்டானவருக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்! - இழப்பீட்டுத் தொகை
தஞ்சாவூர்: இயந்திரத்தில் சிக்கி கை துண்டான பெண்ணுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் இன்று சிஐடியு ஊழியர்கள் சங்கத்தினர் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டவர்களை வேறு பணிக்கு அனுப்பக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.