இங்கிலாந்தில் 12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக பெரும்பாலான அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களின் பெயர் பட்டியலை கடந்த மாதமே அறிவித்தன. இந்தத் தொடரிலாவது, தென்னாப்பிரிக்கா அணி முதல்முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றுமா என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்தத் தொடரை எதிர்நோக்கி இருக்கினர்.
உலகக் கோப்பை: நட்சத்திர ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸுக்கு அடித்த ஜாக்பாட் - உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர்
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணியில், காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் அன்ரீஜ் நோர்டிச் விலகியதால், அவருக்கு பதிலாக நட்சத்திர ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதலில் அறிவித்த டு பிளசிஸ் தலைமையிலான, 15 வீரர்கள் கொண்ட தென்னாப்பிரிக்கா அணியில், நட்சத்திர ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இந்நிலையில், தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பெற்று இருந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் அன்ரீஜ் நோர்டிச் காயம் காரணமாக தற்போது வெளியேறியுள்ளார்.
இதனால், அவருக்கு மாற்று வீரராக கிறிஸ் மோரிஸை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. 32 வயதான கிறிஸ் மோரிஸ் தென்னாப்பிரிக்கா அணிக்காக இதுவரை 34 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் ஒரு அரை சதம் உட்பட 394 ரன்களும், பந்துவீச்சில் 35 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இவரது வருகை, தென்னாப்பிரிக்கா அணிக்கு பேட்டிங், பவுலிங் இரண்டிலும் பலப்படுத்தியுள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இவர் டெல்லி அணிக்காக விளைாயாடி வரும் இவர் 9 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.