கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இரண்டு ஆசிரியர்கள், தொழிலதிபர்கள் இருவர் உள்பட 15க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சின்னசேலம் டாஸ்மாக் கடைகள் மற்றும் பாதிக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சின்னசேலம் நகர பகுதிக்குச் சீல்! - Under control of the health department
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் 15க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தடுப்புக் கட்டைகள் அமைத்து நகர் முழுவதும் சீல் வைக்கப்பட்டது.
கரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த சின்னசேலம் நகர பகுதிக்கு சீல் !!
தடுப்புக் கட்டைகள் அமைத்து நகர் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் மூங்கில்பாடி சாலை, நயினார்பாளையம் சாலை தடுப்புக் கட்டைகள் மூலம் தடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா மற்றும் சுகாதாரத் துறையினர் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.