தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'சீனாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது' : பாதுகாப்பு நிபுணர் கருத்து

இந்தியாவை ஒரு முக்கிய வர்த்தக போட்டியாளராக பெய்ஜிங் பார்க்கிறது என்றும் கோவிட் -19 நெருக்கடியால் இந்தியா உலகளாவிய உற்பத்தி மையமாக மாறக்கூடும் என்றும் ஈடிவி பாரத் உடனான பிரத்யேக பேட்டியில், பாதுகாப்பு நிபுணர் கமர் ஆகா தெரிவித்துள்ளார்.

india china
india china

By

Published : Jun 19, 2020, 9:31 PM IST

ஹைதராபாத்: சீனாவின் பொருளாதாரம் இந்தியாவுடன் போர் புரியும் சூழலில் இல்லை என பாதுகாப்பு நிபுணர் கமர் ஆகா கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் செய்தி ஊடகத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “சீனாவின் பொருளாதாரம் ஏற்றுமதியை நம்பியுள்ளது. ஆனால், தற்போதைய சூழலில், பெய்ஜிங்கில் ஏற்றுமதி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

தற்போதைய சூழலில், இந்தியாவை நிறுவனங்கள் உற்று நோக்குகிறது. சீனாவில் இருந்து தங்கள் செயல்பாடுகளை மாற்ற நிறுவனங்கள் தயாராக உள்ளன. அது இந்தியாவுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தும்.

chinas-economy

சீனா தற்போது இந்தியாவை பெரும் போட்டியாளராகப் பார்க்கிறது. இதனாலேயே சீனாவின் தலைவர்கள் அமைதி பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, அதே நேரத்தில் தாக்குதல் நடத்தவும் தூண்டிவிடுகின்றனர்” என அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details