அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் புகழ்பெற்ற ப்ரீட்பார்ட் செய்தி நிறுவனம் ஆசியாவின் அரசியல் சூழல் குறித்து கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளது.
அதில், ஜூன்15ஆம் தேதி இந்தோ-சீனா எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா இராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியத் தரப்பில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக இந்திய பாதுகாப்புத் துறை தரப்பு கூறியது. ஆனால், சீனத் தரப்பில் எத்தனை வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதை சீனா இன்னும் வெளியிடவில்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவு; இந்த சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த சீன குடும்பங்களை வருத்தப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மேலும், சீன அரசின் இந்த போக்கை வெய்போ உள்ளிட்ட பிற இணையதளங்களில் கண்டித்து தங்கள் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தும் வீரர்களின் குடும்பங்களை அமைதிப்படுத்த அந்நாட்டு அரசு போராடி வருகிறது.