புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு மத்திய சுற்றுலாத் துறை உதவியுடன் கடற்கரை சாலை அழகுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கடற்கரை அருகே உள்ள பாரதி பூங்கா கடற்கரை சாலை ஊசுட்டேரி, கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வன உயிரினங்கள் சிலை பூங்கா அமைக்கப்பட உள்ளது.
குழந்தைகளை கவரும் பாரதி பூங்கா
புதுச்சேரி: பாரதி பூங்காவில் அமைக்கப்ப்டடுள்ள வன உயரின சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகள், குழந்தைகளை பெரிதும் கவர்ந்து வருகின்றன.
முதற்கட்டமாக புதுச்சேரி கடற்கரை சாலை அருகே உள்ள பாரதி பூங்காவில் கருங்கல் படைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டு உள்ள விலங்குகள், பறவைகளின் சிற்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வர்ணம் தீட்டப்பட்டு தத்ரூபமாக காட்சி அளிக்கும் ஓணான், அணில் உள்ளிட்ட விலங்குகளின் சிற்பங்களும் குயில் உள்ளிட்ட பறவைகளின் சிற்பங்களும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்து வருகின்றன.
யுனிவர்சல் எக்கோ பவுண்டேஷன் அமைப்பினரின் கைவண்ணத்தில் இந்த பறவைகள் விலங்குகளின் சிற்பங்கள் உயிரோட்டமாக காட்சியளிக்கின்றன. பாரதி பூங்காவை தொடர்ந்து கடற்கரை சாலையில் பல வகையான மீன்கள் ஆக்டோபஸ் உள்ளிட்ட கடல் உயிரினங்கள் சிற்பங்களும் ஊசுட்டேரி பகுதியில் உள்ளூரை சேர்ந்த பறவைகளின் சிற்பங்களும் வைக்கப்பட உள்ளன.