தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நாமக்கல்லை குழந்தைத் தொழிலாளர்களில்லா மாவட்டமாக மாற்ற உறுதிமொழி! - Collector Megaraj

நாமக்கல்: குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க அரசு ஊழியர்கள், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மேகராஜ் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Child Labour Day Awareness In Namakkal
Child Labour Day Awareness In Namakkal

By

Published : Jun 13, 2020, 12:14 PM IST

ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்புத் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்தாண்டும் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

இதனையொட்டி, நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியர் மேகராஜ் கலந்துகொண்டு குழந்தைத் தொழிலாளர் குறித்த விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார்.

அப்போது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி குழந்தை கல்வி அடிப்படை உரிமையைக் காப்போம், 14 வயது குழந்தைகளைப் பணிக்கு அமர்த்த மாட்டோம், அவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்போம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் கொண்ட உறுதிமொழியை வாசிக்க அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து ஆட்சியர் பேசுகையில், "நாமக்கல் மாவட்டத்தை குழந்தைத் தொழிலாளர்கள் இல்லா மாவட்டமாக மாற்றிட குழந்தைத் தொழிலாளர் தடுப்பு, வருவாய், காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்" என அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:ஊரடங்கு மீறல்: 80 நாள்களில் 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details