கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள், வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் பழனிசாமி செப்டம்பர் 11ஆம் தேதி ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வருகை தருகிறார். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பெஞ்சமின் நேரில் பார்வையிட்டு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
காஞ்சிபுரத்துக்கு முதலமைச்சர் வருகையை ஒட்டி அமைச்சர் ஆய்வு - Kanchipuram district news
காஞ்சிபுரம்: முதலமைச்சர் பழனிசாமி வருகையை ஒட்டி காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் பெஞ்சமின் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் பெஞ்சமின் ஆய்வு
அப்போது, காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.