தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகத் தெரிவுசெய்யப்பட்ட 30 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக ஐந்து பேருக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்ப் பண்பாட்டின் பெட்டகமாகவும், ஆன்மிகத்தின் இருப்பிடமாகவும், கலைத்திறனின் நிலைக்களமாகவும் விளங்குகின்ற திருக்கோயில்களின் சொத்துகளைப் பாதுகாத்து பராமரிப்பது, அன்றாடப் பூஜைகள் தங்குதடையின்றி நடப்பதை உறுதிசெய்வது, பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுப்பது போன்ற பணிகளைத் தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறை மூலமாகச் செயல்படுத்திவருகிறது.
இந்து சமய அறநிலையங்களின் கணக்குகளைத் தணிக்கை செய்திட இத்துறையின் தணிக்கைப் பிரிவானது 19 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, இரண்டு துணை தலைமைத் தணிக்கை அலுவலர் அலுவலகங்கள், 17 மண்டலத் தணிக்கை அலுவலர் அலுவலகங்கள், இவர்களுக்கு உதவியாக 27 உதவி தணிக்கை அலுவலர் அலுவலகங்கள் இயங்கிவருகின்றன.
இத்தணிக்கைப் பிரிவில் காலியாகவுள்ள தணிக்கை ஆய்வர் பணியிடங்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகத் தெரிவுசெய்யப்பட்ட 30 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஐந்து பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், தலைமைச் செயலர் க. சண்முகம், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.