பேரறிஞர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாள் விழா இன்று (செப்டம்பர் 15) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை - சென்னை மாவட்ட செய்திகள்
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செய்தார்.
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை
அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், செல்லூர் கே. ராஜு, தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.