இதுதொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக, நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
கோதையாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் - கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணை
சென்னை: பாசன வசதிக்காக கோதையாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து ராதாபுரம் கால்வாய்க்கு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரையிலான 30 நாள்களுக்கு, விநாடிக்கு 75 கன அடி வீதம், 194.40 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், ராதாபுரம் வட்டத்திற்கு குடிநீருக்கு தண்ணீர் கிடைப்பதுடன், 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.