சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகேவுள்ள 3.34 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் பச்சையப்பன் அறக்கட்டளை ஒப்பந்ததிற்கு எடுத்திருந்தது.
இந்நிலையில் இந்த ஒப்பந்தம் முடிவடைந்ததால், கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி இந்த நிலத்தை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வழங்கி சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்ட இடத்தை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதிகள் கிருபாகரன், எம்.எம் சுந்தரேஷ், சுப்பையா, பாரதிதாசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.