தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'ஏழை மாணவர்களுக்கு வைட்டமின் மருந்துகள் வழங்க வேண்டும்' - அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் - சத்துணவு மையங்கள்

சென்னை: ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க சத்துணவு மையங்கள் மூலம் வைட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஏழை குழந்தைகளுக்கு வைட்டமின் மருந்துகள் வழங்க வேண்டும்- தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
ஏழை குழந்தைகளுக்கு வைட்டமின் மருந்துகள் வழங்க வேண்டும்- தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

By

Published : Jul 13, 2020, 2:34 PM IST

கரோனா தொற்று பாதிக்காமல் தடுக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என உலகச் சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச முட்டைகள் வழங்கவும், ஏழை மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்கக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர் சுதா பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ”ஏழை மக்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள 407 அம்மா உணவகங்களில் ஊட்டச்சத்து நிறைந்த முட்டைகளை இலவசமாக வழங்க வேண்டும்.

அதேபோல, தற்போது பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள 43 ஆயிரத்து 243 சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க வேண்டும்” என்று மனுதாரர் வாதிட்டார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க சத்துணவு மையங்கள் மூலம் வைட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தி, இந்த மனு தொடர்பாக ஜூலை 20 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details