நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதியோடு முடிவடைவதால், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.
அதில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜூன் 1ஆம் தேதி முதல் 33 அமர்வுகளில் நீதிபதிகள் நீதிமன்ற அறையிலோ அல்லது நீதிபதிகளின் அறையில் இருந்தோ வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையை பொறுத்தவரை, வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகளை விசாரிப்பதுடன், அரசுத்தரப்பு வழக்கறிஞருடன் சேர்த்து ஐந்து வழக்கறிஞர்களை மட்டும் நீதிமன்ற அறையில் அனுமதித்து வழக்குகளை விசாரிக்கலாம் என அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அறைகளில் 10 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணை மூலம் கரோனா வைரஸ் பரவும் அபாயம் இருந்தால், வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதிகள் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'நீதிபதிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரிக்க வேண்டும்' - lockdown 5.0 updates
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் முக்கியமான வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்