சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (செப்.4) தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னை பழ கமிஷன் ஏஜெண்டுகள் சங்கத்தலைவர் எஸ். சீனிவாசன், சங்க நிர்வாகிகள் ஆகியோர் நேரில் சந்தித்து கோயம்பேடு அண்ணா பழ அங்காடி வளாகத்தை விரைவில் திறக்குமாறு கேட்டுக்கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது, விருகம்பாக்கம் சட்டப் பேரவை உறுப்பினர் விருகை வி.என்.ரவி உடனிருந்தார். கரோனா தொற்று பரவல் காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இந்நிலையில் வணிகர் சங்கங்களின் கோரிக்கையை அடுத்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.