சென்னையில்கரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இருப்பினும், தொற்றின் தீவிரம் குறையாமல் இருக்கிறது.
சென்னையில் உள்ள மக்கள் கரோனா தொடர்பாக தகவல் மற்றும் ஆலோசனை பெறுவதற்காக முதலில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தொலைப்பேசி ஆலோசனை மையத்தைத் தொடங்கியது. இந்நிலையில், சென்னையில் நோய்த் தொற்று அதிகரித்துவருவதால் மக்களிடையே சந்தேகங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக தொலைப்பேசி ஆலோசனை மையங்களை அமைத்துள்ளது.
மக்கள் இந்த மையங்களைத் தொடர்புகொண்டு சாதாரண காய்ச்சலுக்கு என்ன செய்வது? பரிசோதனைக்கு என்ன செய்வது? அவரவர் மண்டலங்களில் எவ்வளவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன? போன்ற அனைத்துத் தகவல் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.
மண்டல வாரியாக தொலைப்பேசி ஆலோசனை மையங்களைத் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்:
திருவொற்றியூர்- 044 - 46556301
மணலி- 044 - 46556302
மாதாவரம்- 044 - 46556303
தண்டையார்பேட்டை- 044 - 46556304
ராயபுரம் - 044 - 46556305
திருவிக நகர்- 044 - 46556306