தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தனியார் நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை...! - சென்னை மாநகராட்சி

சென்னை: சாலைகளில் விதிமுறைகளை மீறி பணிகள் மேற்கொள்ளும் பராமரிப்புத் துறைகள், தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மாநகராட்சி

By

Published : Jun 16, 2019, 7:49 AM IST

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாலைப் பணிகள், பல்வேறு திட்டங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் இது குறித்து அவர் பேசுகையில்,

"சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டுவரும் பேருந்து, உட்புறச் சாலைகளில் பணிகள் மேற்கொள்ளும் பராமரிப்புத் துறைகள், தனியார் நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மீறினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் அதற்கான பணிகளில் அனைத்துத் துறை அலுவலர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details